நாட்டில் மேலும் சில தினங்கள் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version