நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள்  (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார்.

 

கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுச் சேவைகள் கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்டன.

இப் படகு சேவைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் வழமைபோன்று இடம்பெறும். வடதாரகை காலை 8 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடையும்.

ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடும். மேலும்கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன் காரணமாக மேலதிக படகு சேவைகள் நடத்தப்படும் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version