வினாத்தாளுக்கு பதிலளிக்கவில்லை என ஆசிரியர் ஏசியதாகவும் அதனால் வாழ விருப்பமில்லை என 15 வயது மாணவியொருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் நேற்று (31.05.2020) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்ற கூரையில் சல்வாரின் சோல் துணியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தை கண்ட தாயார்  உடனடியாக மாணவியை தூக்கில் இருந்து கழற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என ஏசியதாகவும் அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version