யாழ்ப்பாணம், புலோலி அ.மி.த.க பாடசாலையில இருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வழமை போன்று நேற்று இரவு கடமைக்குச் சென்ற நிலையிலையே, இன்றைய தினம் காலை குறித்த காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version