வவுனியா மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட காத்தார் சின்னக்குளம் 4 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டுக்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
பின்னர் கதவை உடைத்து பொலிஸார் உள்ளே சென்று பார்வையிட்டபோது கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் காணப்பட்ட இளைஞரின் சடலத்தை மீட்டனர்.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.