தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன்.  இதற்கான  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார் நாயகம் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சிவவிதம்பரம் 18 ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்ட உப தலைவர் சின்னத்தம்பி நவச்சிவாயம் அவர்களின் நினைவு தினம்  சனிக்கிழமை காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் நான் அன்று கூறும் கருத்துக்கள் பொய் என்றால் கோயிலுக்கு  முன் சத்தியம் செய்யட்டும் பார்ப்போம்  பாராளுமன்ற சம்பிராயத்தில் சிரேஸ்ட உறுப்பினருக்கு  கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர். ஆனால் பதவி ஆசையால்  வேறு ஒருவரை தெரிவுசெய்தார்கள்  பதவிக்கு ஆசைப்படாதவன் நான்  என்பதால் எதுவும் பேசவில்லை. இப்படிபட்டவர்கள் இன்று தமிழ்மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் இவர்களால்தான் இப்பிரச்சினை தீர்கப்படாதுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளை யார் அழித்தார்களோ அவர்களோடுதான் தேர்தல் கேட்கிறார்கள்.  இது துரோகம் இல்லையா. விடுதலைப்புலிகளை  காரணம் காட்டி அவர்களை அளித்தவர்கள்  நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள் உண்மையை கூறியதால் நான் துரோகி ஆகிவிட்டேன்.  போர் உக்கிரம் அடைந்த போது இந்தியா பேசுவதற்கு அழைத்தபோது யுத்தத்தை நிறுத்துங்கள். நாங்கள் வருகிறோம் என கடிதம் எழுதுகிறார்கள்.  இதன் ஆவணம் இன்றும் உள்ளது இவ்வாறாக பல விடயங்கள் என்னிடம் உள்ளது இவை தொடர்பில்  பாராளுமன்ற தேர்தல் காலத்தில் வெளியிடவுள்ளளேன்  மக்கள் அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version