Site icon ilakkiyainfo

மனைவியை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் உட்பட 5 பேர் கைது

கேரளாவில் 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெட்டுத்துறா கடற்கரை பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துள்ளார்.

பிறகு தனது அவரது குழந்தைகள் கண் முன்பே, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையையும் அந்த மனிதாபிமானமற்ற கும்பல் அடித்துத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் ஊடகத்திடம் அளித்த தகவலில் கூறி இருப்பதாவது:-

“என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின்(கணவரின் நண்பர்) வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்தனர்.

சுமார் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் வீட்டிற்கு வெளியே இருந்தனர். நான் விரும்பவில்லை என்று சொன்னபோதும் எனக்கு வலுக்கட்டாயமாக மது வழங்கப்பட்டது.

என் கணவர் இடையில் கிளம்பினார். யாரோ என் தோளைப் பிடித்தபோது, அங்குள்ள பெண்மணி என்னை வேகமாக வெளியேறச் சொன்னார், பின்னர் நான் என் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். ஆனால் நான் சாலையில் நுழைந்தபோது, ஆண்கள் என்னைத் தடுத்து என்னை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்,

“என்னை ஒரு புதருக்கு அழைத்துச் சென்று நான்கு ஆண்கள் துன்புறுத்தினர். நான் துன்புறுத்தப்பட்டபோது என் கணவர் அங்கு இல்லை. அவர் சொல்லி நான் தாக்கப்பட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்,

மேலும் தனது கணவர், அவரது நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கியே இந்த கொடூரத்தை நடத்தி இருக்கலாம் எனவும் குறித்த பெண்மணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து தப்பி வந்து சாலையில் உதவிக்காக நின்ற அந்தப்பெண்ணை வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் மீட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவருடன் அவரது நண்பர்கலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் கூறும் போது அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. “அந்தப் பெண்ணின் முகத்திலும் கண்களுக்கு அருகிலும் தாக்குதல் அடையாளங்கள் உள்ளன.

அவர் சிராயின்கீஷு தாலுகா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்லார்.

ஆனால் நாங்கள் இன்னும் மருத்துவ அறிக்கையைப் பெறவில்லை. அவருக்கு சில சிறிய காயங்கள் இருந்தாலும், தற்போதுள்ள கொரோனா நிலைமை காரணமாக அவரை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர் என்று கூறி உள்ளனர்.

Exit mobile version