தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய பாராளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம்.

அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும். அதை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இதுவேஅரசியல் தீர்வு தொடர்பான என்னுடையதும் எனது அரசினதும் நிலைப்பாடாக இருக்கின்றது” எனக் கூறியிருக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்களித்த நேர்காணலில் இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த நேர்காணலில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம்தான் வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது. ஏனெனில் இது உள்நாட்டுப் பிரச்சினை. நாம்தான் பேசித் தீர்க்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும். ஒற்றுமையாக – நெருக்கமாக இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். முரண்பட்டு நின்றால் எந்தப் பயனும் இல்லை” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version