யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் ஒன்றினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம் தெரியாத மர்ம நபர்கள் கற்களால் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் விகாரைக்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த தாக்குதல் சம்பவத்தை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.ரி.வி காணொளிகள் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version