யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நேற்று முன்தினம் (10) இரவு குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆனந்தன் டிலக்சனா (28) என்ற பெண்ணே மரணித்துள்ளார்.

சாவகச்சேரி நீதிவானின் பணிப்பின் பிரகாரம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி சிரேஸ்கரன் தவமலர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version