பிரபல நடிகை, தனது தாய் உடைகளை தர மறுத்ததால் தந்தையின் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்தவர், சில படங்களுக்கு பிறகு நடிக்கவில்லை.

பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இன்நிலையில்..

தந்தையுடன் ஷெரின்

இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். “எனது தாய் தனது உடைகளை தர மறுக்கிறார்.

எனவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version