இலங்கையில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,880 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று வரை இறுதியாக அடையாளம் காணப்பட்ட 03 கொரோனா தொற்றாளர்களில், இருவர் கடற்படையினர் எனவும், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த நபர் ஒருவருமே என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1196 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 673 பேர் வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

46 பேர் கொரோனா தொற்றால் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version