வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உள்நுழைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் உட்பட ஐந்துபேர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version