திருகோணலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், பொது பஸ் தரிப்பிடத்தில் வைத்து 8 வயது சிறுமி ஒருவரை கடத்த முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் உடனடியாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 11,30 மணியளவில் திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்தில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

தனது இரு வயதான உறவினர்களுடன் வந்த குறித்த சிறுமி , ஒரு வயதான உறவினருடக் திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்தில் நின்ற நிலையில் மற்றையவர் அருகில் உள்ள பார்மசி ஒன்றுக்கு மருந்து எடுப்பதற்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து மருந்து எடுத்துக் கொண்டு வந்த உறவினர், சிறுமியோடு நின்ற வயதான உறவினர் சிறுமியைக் காணாது அழுது கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக இரு வயதான உறவினர்களும் திருகோணமலை தலைமையாக பொலிஸில் முறையிட்டதையடுத்து, உடனடியாக செயல் பட்ட பொலிஸார் அப்பகுதில் உள்ள தேனீர் கடையில் உள்ள சி.சி.ரி.வி. கெமரா மூலம் தகவலை பெற்று சிறுமியை கடத்திய இளைஞன் தொடர்பில் தேடுதல் மேற்கொண்டனர்.

இச் சிறுமியை கடத்திய இளைஞன், பொது பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு கூட்டிச் செல்லும் போது தலைமையாகப் பொலிஸார் 40 நிமிடங்களுக்குள் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

திருகோணமலை நலாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த (வயது -23) இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் இச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலேயே அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சிறுமி திருகோணமலை முள்ளிப் பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர், இவரின் தாயார் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிபவரெனவும், தந்தை வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் ஒன்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளபரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version