யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளது.

கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேஷ்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version