” விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்கிறவரை நடிகை வனிதா விஜயகுமார் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார்.

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா.

பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள்.

மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை ஜூன் 27 அன்று சென்னையில் திருமணம் செய்யவுள்ளார்.

தனது திருமணம் பற்றி வனிதா விஜயகுமார் கூறியதாவது:எனக்கு 40 வயது ஆகப் போகிறது.

ஊரடங்குக் காலம் வாழ்க்கையில் பல விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.ஒரு நண்பராக பீட்டர் பால் எனக்கு அறிமுகமானார்.

ஊரடங்குச் சமயத்தில் எனது யூடியூப் சேனலின் தொழில்நுட்ப உதவிக்கு அவர் மிகவும் ஆதரவாக இருந்தார்.

அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொள்கிறார். அவர் அருகில் இருக்கும்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.

எனக்குக் குழந்தைகள் தான் முக்கியம் என அனைவருக்கும் தெரியும். திருமணம் செய்துகொள்கிறீர்களா எனக் கேட்டபோது நான் பேச வழியில்லாமல் ஆனேன். (ஆனால் உள்ளுக்குள் ஆமாம் எனக் குரல் எழுப்பினேன்.) இதற்குக் குழந்தைகள் சம்மதிக்க வேண்டும் என்றேன்.

அவர்களிடம் அவர் கேட்டபோது அவர்களும் உரத்தக் குரலில் சரி என்றார்கள். சிங்கிள் மதராக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.

குடும்பம் என்று சொல்லக்கூடியவர்கள் எனக்கு உதவவில்லை.பீட்டர் பால் யார் என்று கேட்கிறவர்களுக்கு!அவர் தொழில்முறையில் ஓர் இயக்குநர்.

அன்பானவர், நேர்மையானவர். என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். அவருடைய படங்கள் பற்றி விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version