உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபருக்கு மரத்தால் செய்யப்பட்ட உருவ பொம்மையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
9 பிள்ளைகளின் தந்தையான ஷிவ் மோகன், தன்னுடைய எட்டு மகன்களுக்கு திருமணம் செய்துவைத்துவிட்ட நிலையில் கடைசி மகனுக்கு இந்த வினோத திருமணத்தை நடத்தியுள்ளார். மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்ட உருவ பொம்மையின் அருகில் மணமகன் அமர, திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.
கடைசி மகனுக்கு சொத்து என்று எதுவும் இல்லாததோடு, அறிவாளியாகவும் இல்லாததால் இப்படி திருமணம் செய்ய நேரிட்டதாக வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார் மணமகனின் தந்தை.
ஷிவ் மோகன் இறப்பதற்கு முன்பு தன்னுடைய 9 மகனுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டுமென ஆசைப்பட்டதாகவும், அதனால் கடைசி மகனுக்கு இப்படி ஒரு திருமணத்தை நடத்தி வைத்துள்ளதாகவும் அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.