உணவு விநியோக ஊழியர் ஒருவரிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்த நபர்கள், மனம்மாறி அப்பொருட்களை மீள ஒப்படைத்துவிட்டு, ஆறுதலும் கூறிச் சென்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

கராச்சி நகரில் நடந்த இச்சம்பவத்தின்போது பதிவாகிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாகிஸ்தானின் பிரபல உணவு விநியோக நிறுவனமொன்றின் ஊழியரான இளைஞர் ஒருவர், விநியோகம் ஒன்றின்பின்னர் தனது மோட்டார்சைக்கிளை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள்; அந்த இளைஞரிடமிருந்த பொருட்களை அபகரித்தனர்.

இதனால், மேற்படி இளைஞர் அழ ஆரம்பித்தார். இதையடுத்து மேற்படி நபர்கள், தாம் கொள்ளையடித்த பொருட்களை அவரிடம் மீள ஒப்படைத்தனர்.

அத்துடன் குறித்த இளைஞரை கட்டித்தழுவி ஆறுதல் கூறியதுடன், கைலாகும் கொடுத்துவிட்டுச் சென்றமை வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version