இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள் என்பதை ஏற்கொள்வோம் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ள ஐக்கிய பிக்குகள் முன்னணியினர் கூறியுள்ளதாவது,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் , ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கிழக்கு மாகாண வேட்பாளருமான கருணா அம்மான் கிழக்கில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசும்போது , தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையான இராணுவத்தினரை கொலைச் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது பெரும் சமூக குற்றச் செயலாகும். இந்த கருத்தானது தேசப்பற்றுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யுத்தகாலத்திலே உயிரிழந்த இராணுவத்தினரில் எமது இரத்த உறவுகளும் உள்ளடங்குகின்றனர்.

இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான கருணாவுக்கு மக்களிடம் அறவிடப்படும் வரி பணத்திலிருந்து வாழ்க்கை நடத்துவதற்கான சந்தர்ப்பதத்தையும் , அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறும் அனைத்து வரப்பிரசாரங்களையும் ராஜபக்ஷாக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்களபௌத்த மக்களுக்காகவும் , இராணுவத்தினருக்காகவும் குரல் எழுப்பிய பிக்குகள் தற்போது எங்குள்ளார்கள்?

 

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களையும் , இராணுவத்தினரையும் ஏமாற்றி அவர்களை காட்டிக் கொடுத்து சில தேரர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதை அவதானித்திருந்தோம்.

இந்நிலையில் கருணாவின் கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் வந்து மதபோதனைகளை வழங்கும் தேர்ரகள் அவர்களின் கருத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version