திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று (24.06.2020) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அல்லை நகர் ,6 ஆம் வட்டாரம், தோப்பூரை வசிப்பிடமாக கொண்ட ஜவாகிர் முகமது அஹ்சன் (வயது 23) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மூதூர் பிரதேசத்தில் இருந்து கிளிவெட்டி நோக்கி சென்ற அம்பியூலன்ஸ் வண்டியும் தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மூதூர் பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் மரணமாணவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாம் கைது செய்தாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version