Site icon ilakkiyainfo

யாழ் வட்டுக்கோட்டையில் பெண்களை அச்சுறுத்தி கொள்ளை! சந்தேக நபரது வீட்டுக்குச் சென்று காட்டிக் கொடுத்த பொலிஸ் மோப்ப நாய்

யாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வயோதிபப் பெண்களைத்  தாக்கி நகை மற்றும் பணத்தை  கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில்  ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்  மோப்ப நாயின் உதவியுடனே  சந்தே நபர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சித்தங்கேணிப் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (27) வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்கள்  அங்கிருந்து வயோதிப பெண்கள் இருவரை  மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றுள்ளார்

அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயைத்  துணியால் கட்டிவிட்டு  அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு  வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த பெண்   போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும்  எடுத்துக் கொடுத்துள்ளார்.

பின்னர் கொள்ளையிட்ட  பொருட்களுடன்   அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு இன்று  (27)  மேப்ப நாயுடன் சென்ற தடவியல் பொலிஸார்  சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து  பொலிஸ் மோப்ப நாய்   ஒருவருடைய வீட்டுக்கு  நேரடியாக சென்றுள்ளது.

இதனடிப்படையில் குறித்த வீட்டில் இருந்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Exit mobile version