குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், வெங்கடேஸ்வரலு லாவண்யாவை கடுமையாக தாக்குவதும், அதை லாண்யா வளர்த்து வந்த செல்லநாய் தடுப்பதும், சிறுதுநேரத்துக்கு பிறகு வயிற்றில் கை வைத்தபடி அழுதுகொண்டே நடப்பதும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருந்தது.
இதைப் பார்த்த லாண்யாவின் நண்பர்கள் உடனே லாண்யாவின் பெற்றோருக்கும், கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து வெங்கடேஸ்வரலு வீட்டுக்கு சென்று பார்த்தபோது லாவண்யா தற்கொலை செய்திருந்ததாக கூறப்படுகிறது.
లావణ్య లహరి సాఫ్ట్ వేర్ ఉద్యోగి. భర్త పైలెట్. అతడి క్రూరత్వం తట్టుకోలేక హైదరాబాదులో ఆత్మహత్య చేసుకుంది. అమ్మాయిలూ చెత్త వెధవలకోసం బలిదానం వద్దు. బతికి సాధించండి. pic.twitter.com/PwowC4RFLH
— Vasireddy Padma (@padma_vasireddy) June 26, 2020
இதுகுறித்து தெரிவித்த லாவண்யாவின் பெற்றோர், வெங்கடேஸ்வரலுவும், லாவண்யாவும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
குழந்தை இல்லாத காரணத்துக்காக வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது குடும்பத்தினரால் லாவண்யா தொடர்ச்சியாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை.
தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.