ஈரானிய ஜெனரல் காசிம் சுலேமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது ஈரான் அரசு.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று நம்பும் முப்பதிற்கும் மேற்பட்டவர்களையும் தடுத்து வைக்குமாறு இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

கடந்த திங்கட்கிழமை தெஹ்ரான் வழக்கறிஞரான அலி அல்காசிமர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் 30 அமெரிக்கர்கள் மீது கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அல்காசிமர் ட்ரம்பைத் தவிர வேறு யாரையும் அடையாளம் காட்டாத போதும் ஜனாதிபதிப் பதவி முடிவடைந்தாலும் இந்த வழக்குத் தொடரும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version