நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் ஹெலன் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

“எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க. மகன் ஜான் எட்வர்ட், 2-ஆம் வகுப்பு,  மகளுக்கு 8 வயதாகுது, 3-ஆம் வகுப்பு படிக்கிறாங்க.

எல்லாருக்கும் இருக்குற மாதிரியே எனக்கும் என் கணவருக்கும் 4 வருடங்களாக சின்ன புரிதலின்மை இருந்து வந்தது.

ஒரு பெண்ணுடனான உறவுகாரணமா மதுவுக்கு அடிமையானார். அதற்காக மறுவாழ்வு மையத்தில் சேர்த்தோம்.

அப்போது அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த அவர் கண்ணாடி கதவுகளில் சிக்கி ரத்தம் வடிந்த நிலையில் மீண்டும் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தது.

என் குழந்தைங்களின் மனநிலையும், படிப்பும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, மௌலிவாக்கத்தில் இருக்கும் என் மாமியார் வீட்டில் அவரை கொண்டு போய் வைத்துவிட்டு, ஆனால் அந்த இடம் தூரம் என்பதால் நான் என் குழந்தைங்களுடன் இருந்தேன்.

அவர் மீடியாவில் இருப்பவர், அதனால் நிறைய பெண்களுடன் சென்றுவிட்டு வருபவர்தான்.

ஆனால் நாங்கள் உண்மையில் பிரியவில்லை. இந்நிலையில் கடந்த வராம், என் கணவரை திருமணம் செஞ்சுக்க போறதா வனிதா வெளியிட்ட வீடியோவை அடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, என் கணவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்போது, அவர் ‘என்னுடைய முன்னாள் மனைவியை’ முறையாக விவாகரத்து பண்ணாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

அப்படி செஞ்சா என் மேல நடவடிக்கை எடுங்கனு எழுதிக் கொடுத்தார் என் வீட்டுக்காரர். அப்போதும் விவாகரத்து ஆவதற்கு முன்னரே என்னை முன்னாள் மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், நான் எழுதிக்கொடுத்த எல்லா ஆவணங்களும் கூட அவரிடம் இருந்தது. ஆனால் நேற்று காலையில் திருமணத்தை வனிதா பிளாட்டுக்குள்ளயே வெச்சு முடிச்சுட்டாங்க.

எனக்கு அவர் வேணும், என் குழந்தைங்களுக்கு அங்கீகாரமே அவர்தான். யூடியூப் வீடியோ வந்ததும் எல்லாரும் எங்களிடம் கேட்டாங்க.

என் மகனை விட்டு, நான் அவரிடம் கேட்க சொன்னேன். அப்போது என் கணவர், அதெல்லாம் சும்மா.. நான் வந்து பேசுறேன்னு சொன்னார்.

ஆனால் வீட்டுக்கு வரும்போது, ஒரு நண்பருடன் வந்தார். யூடியூபில் எல்லாம் வந்த வதந்தியை உண்மையாக்கப் போவதாக தெரிவித்து ஒரு கையெழுத்து கேட்டார். இதனால் என் அம்மா, அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக என் மகளுக்கும்,

பேரன்களுக்குமான பணம், நகைகளைக் கொடுத்துடுங்க என்று சொன்னதை ரெக்கார்டு பண்ணிக்கொண்டு, அதை காவல் நிலையத்தில் காண்பித்து, என் அம்மா ஒப்புக்கொண்டதாக திருப்பிவிட்டிருக்கார்.

என் மகனை ஒரு முறை அழைத்துச்சென்று போய்விட்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு, இப்போது மகனும் சம்மதிச்சிட்டதுபோல் மாற்றி சொல்கிறார்கள்.

எழுதிக் கொடுத்ததையும் மீறி உங்களால என்ன பண்ண முடியும் என்பது போல், வனிதா நெனைச்சதா சாதிச்சுட்டாங்க.

அவங்க கிட்ட ஆள், பணபலம் எல்லாம் இருக்கு. அவங்க (வனிதா), நாலு வக்கீலுக்கு சமம்னு ஏற்கனவே சொல்லியிருக்காங்க.

ஆக, சினிமா நடிகை, பெரிய ஆளு, பணபலம் இருப்பவங்களுக்குதான் எல்லாத்தையும் பண்ணிக் கொடுப்பாங்களாம்.
அவங்க 15 பேரோட வந்தாங்க. நாங்க காவல் நிலையத்தில் என் தம்பியுடன் சென்று தனியா போய் நின்னேன்.

வனிதா பத்தி யாரும் எதுவுமே பேசல. உன் வீட்டுக்காரர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராமே?னுஎன்ன பாத்தும்,  உங்கப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாராமேனு என் கொழந்தைங்கள பாத்தும் கேக்குறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. என் கணவருக்கு வருமானம் கிடையாது, பிரசாத் லேபில் பணிபுரிந்த இவர், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் பணம் கேட்பதனால இவங்க உடனே திருமணம் செஞ்சுகிட்டாங்களா? காசு இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். இப்ப இவரைக் கூட துரத்திவிட்டு, வனிதா இன்னொரு கல்யாணம் பண்ணுவாங்க. பத்தோட பதினொன்னாவதா, அவளுக்கு வேலையும் செஞ்சுக்கணும், கூடவும் இருக்கணும் என்று என் கணவரை திருமணம் செஞ்சுகிட்டாங்க வனிதா. அவங்களுக்கு மட்டும்தான் எமோஷன், செண்ட்டிமெண்ட்லாம் இருக்கா? எனக்கு 41 வயது ஆகுது, எனக்கெல்லாம் இல்லயா?!”

இவ்வாறு பீட்டர் பாலின் மனைவி, பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.

</

Share.
Leave A Reply

Exit mobile version