வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் .

 

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version