யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்தவர் சாரதி பக்க கதவினை திறந்து கொண்டு இறங்க முற்பட்டுள்ளார்.

அவர் அவதானம் இல்லாமல் திடீரென கார் கதவினை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கார் கதவுடன் மோதி விழுந்துள்ளார்.

 

இவ்விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட முதியவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version