மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை வந்து சென்ற விடயம் தொடர்பாக  புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சந்தேக நபர் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பகல் 12.30 மணியளவில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் ஆலயத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை ஆலயத்தினுள் இருந்த பெண் ஒருவர் அவதானித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் அந்தப் பெண் வினவிய போதும் அவருடைய பதில் குறித்த பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண் ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

உதவி பங்குத்தந்தை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் பேசாலை பங்குத்தந்தை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

பேசாலை பொலிஸார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி காணொளியை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version