தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகம் தற்போது, இராணுவம் மற்றும் பொலிஸாருடைய முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கு 50 ற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டே மேற்படி முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை அலுவலகத்திற்கு சென்ற யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கரும்புலி நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றுள்ளனர் என்றார்.