அறிவிக்கப்பட்டபடி நாளை திங்கட்கிழமை முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடமைகளுக்குத் திரும்பினர்.
ஜூலை 20ஆம் திகதி தரம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிகைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நான்காம் கட்டமாகதரம் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.