பாரிஸில் Chapelle Expiatoire என்னும் ஆலயம், பாரீஸில் அமைந்துள்ள புராதன நினைவிடங்களில் ஒன்றாகும்.

அந்த ஆலயத்தின் சுவர்களில் ஏதோ அசாதாரணமாக இருப்பதை கவனித்த அதன் நிர்வாகி, பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.

அதிகாரிகள் புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரை வரவழைக்க, Philippe Charlier என்னும் அந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர், சுவர்களை இடிக்காமலே, சிறு துளைகள் இட்டு அதன் வழியாக கமெரா ஒன்றைச் செலுத்தி ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவையாக இருந்துள்ளன.

அந்த சுவர்களில் மனித எலும்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, மேலும் சில இடங்களை ஆய்வு செய்தபோது, மேலும், அதிரவைக்கும் தகவல்களைக் கண்டுபிடித்தார் Philippe.

அந்த ஆலயத்தின் கீழ் பகுதியில் நான்கு பெரிய மரப்பெட்டிகல் இருந்துள்ளன.

அவை, முழுவதும் மனித எலும்புகளால் நிறைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் Philippe.

இந்த ஆலயம், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் மன்னர் 16ஆம் லூயிஸ் மற்றும் அவரது மனைவியான Marie Antoinette ஆகியோரின் நினைவாகக் கட்டப்பட்டதாகும்.

பிரெஞ்சுப் புரட்சியின்போது guillotine என்னும் தலை வெட்டும் இயந்திரத்தால் கொல்லப்பட்ட சுமார் 500 பேரின் உடல் பாகங்கள் இந்த ஆலயத்தின் சுவர்களில் மறைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த அதிர வைக்கும் தகவலையடுத்து, அந்த ஆலயத்தை தொடர்ந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version