கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று(09) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

விசுவமடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version