வியட்நாமில் பிறந்த குழந்தை ஒன்று தாயின் கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தவாறு பிறந்துள்ள சம்பவம் புகைப்படமாக தற்போது வைரலாகிவருகிறது.

வியட்னாமில் வசிக்கும் ஒரு தம்பதியினர் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த பெண்ணிற்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்தடை சாதனம் பொருத்திய பிறகும் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மூன்றாவது முறை கற்பமாகியுள்ளார்.

ஒருவழியாக பிரசவ நாளும் நெருங்கியது, பிரசவத்திற்காக அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், கரு உருவாகாமல் இருக்க பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை தனது கையில் பிடித்தவாறு அந்த குழந்தை பிறந்துள்ளது.

கருத்தடை கருவியால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், குழந்தை 3.2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தை கையில் கருத்தடை சாதனத்தை பிடித்தவாறு பிறந்ததை பார்த்து ஆச்சரியப்பட்ட மருத்துவர் குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை அப்படியே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அனைவராலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version