வேறொரு பெண்ணுடன் தொடர்பினை கொண்டிருந்த தனது கணவர் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது அவரது ஆணுறுப்பை வெட்டிய கர்ப்பிணி மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நைஜீரியாவின் கஸோல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளத

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவினை பேணிவருவதை அறிந்ததன் பின்னர் தான் மிகவும் ஆத்திரமடைந்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான ஹலீமா உமர் எனும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கணவர் அலியூ உமர் தனக்கு இழைத்த துரோகத்துக்கு பழிதீர்க்கும் வகையில் கத்தியினால் அவரது ஆணுறுப்பை துண்டாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

துண்டாடப்பட்ட ஆணுறுப்பை பொறுத்துவதற்கு வைத்தியர்கள் பெரும் முயற்சிகளை முன்னெடுத்திருந்த போதிலும் அது பயனளித்திருக்கவில்லை.

இந்நிலையில், அந்நபர் இனி ஒருபோதும் உடலுறவுக்கு கொள்ளமுடியாது என்றும், சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர் குழாய் ஒன்றினையே அவர் பயன்படுத்த வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் எட்டு மாத கர்ப்பிணியான அந்நபரின் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹலிமா தனது கணவருக்கு போதைமருந்து வழங்கிய பின்னரே இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என உமரின் சகோதரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version