இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஓரிரு நாட்களில் நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை லொக் டவுன் செய்யுமாறு சுகாதார பிரிவுகள் அரசாங்கத்திடம் வேண்டுக்கோள் விடுத்துள்ள போதிலும் பொது தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் அந்த நடவடிக்கையை பின்வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையினுள் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளமையினால் வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார தரப்பை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version