முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 5 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தந்தை ஒருவர் தனது 5 வயது சிறுமியை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version