கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அவரது குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா, மடுகந்தை பகுதியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்றுமுன்தினம் மீண்டும் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார், மகள், உறவினர் உட்பட நான்குபேர் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version