அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை (13) முதல் எதிர்வரும் 17 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தீவிர அவதானம் செலுத்தியிருந்த நிலையில் தற்போதைய நிலைமை மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் போலி செய்திகள் என்பவற்றினால் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரிர்கள் சந்தேகம் மற்றும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றமை அவதானிக்கப்பட்டது.
எனவே மாணவர்கள் மற்றும் பாடசாலை சார் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதற்கமைய, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர்களின் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு ஒரு வாரத்துக்கு அதாவது நாளை முதல் 17 ஆம்திகதிவரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அனைத்து தனியார் பாடசாலை, சர்வதேச பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.
அவ்வாறே, தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக உபயோகப்படுத்தப்படும் பாடசாலைகளை குறித்த தினத்தில் வாக்களிப்புக்கு கடமைகளுக்காக திறப்பது அனைத்து அதிபர்களினதும் கடமை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.