அமெரிக்காவில் தீப்பிடித்த கட்டடம் ஒன்றிலிருந்து தனது குழந்தை கீழே வீசி காப்பாற்றிய தாயொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
அக்குழந்தையை இளைஞர் ஒருவர் தனது கைகளால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளார்.
அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில், குடியிருப்பொன்றில் அண்மையில் தீப்பரவல் ஏற்பட்டது.
ஆபயக் குரல் கேட்டு 28 வயதான பிலிப் ப்லென்ஸ் ஓடிச்சென்றதை சம்பவ இடத்திலிருந்த ஒருவர் தனது கைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜெம்சன் லொங் என்ற குறித்த சிறுவனை தீயிலிருந்த காப்பாற்ற அவரது தாய் ரேச்சல் லொங் (32) தூக்கி எறிந்தார்.
எனினும், அத்தாய் காப்பாற்றப்படவில்லை. குழந்தையை காப்பாற்றி தனது உயிர் தியாகம் செய்த அப்பெண்ணே உண்மையான வீரர் என்றார் குழந்தையை காப்பாற்றிய பிலிப்.
இந்நிலையில், ஜேம்ஸனும் அவரது 8 வயதான மூத்தசகோதரி ரொக்ஸேனும் எறிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில், ரேச்சல் உடலில் தீப்பற்றியபோது, அவர் தனது மகள் ரொக்ஸி காப்பாற்ற முயன்றார். அயலவர் ஒருவர் கதவை உடைத்து சென்று ரொக்ஸியை காப்பாற்றினார்.
ரொக்ஸிக்கு தற்போது 8 சத்திரசிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ரேச்சலின் கணவர் தற்போது அவர்களுடன் இல்லை.
பின்னர், சம்பவ இடத்துக்கு சென்ற சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து, குறித்த கட்டடத்தில் இருந்து ரேச்சலின் சடலத்தை மீட்டிருந்தனர்.
(வீடியோ)