அணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுமியும், நபர் ஒருவரும் நடந்து செல்கின்றனர். அந்த நபர் தனது கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்திருக்கிறார்.

இதனை கவனித்த அணில் ஒன்று அவரை பின்தொடர்ந்து சென்றது. தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பதுபோல் அந்த நபரை நெருங்கியது. இந்த காட்சி நாம் கைகளை உயர்த்தி ஒருவரிடம் ஏதேனும் கேட்பதுபோல் அமைந்திருந்தது.

அந்த நபர் திரும்பி இரக்கத்துடன், தண்ணீர் பாட்டிலை திறந்து அதன் அருகே கொண்டு செல்கிறார். அந்த அணில் அழகாக தனது முன்னங்கால்களால் அதனை வாங்கி தண்ணீர் குடித்தது. பாட்டில் முழுவதும் காலியான பின் சற்று ஓய்வெடுப்பதுபோல் தயக்கத்துடன் நின்றது. இதயம் தொட்ட இந்த வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version