தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் இரண்டாயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 83 ஆயிரத்து 377 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 36 பேர் மரணித்துள்ளனர்.

சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக மூவாயிரத்து 295 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மூவாயிரத்து 391 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 48 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version