தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “புங்குடுதீவு வீட்டுத்திட்டம்” இன்று (18.07.2020) இராணுவத்தளபதியால் கையளிக்கப்பட்டது.
புங்குடுதீவு 1 ஆம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம், பல தடைகளின் மத்தியில், இராணுவத்தினரின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மத தலைவர்கள், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், பிரதம செயலாளர் எஸ். பத்திநாதன், அரச அதிகாரிகள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன, கடற்படை அதிகாரி, உள்ளிட்ட பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.