பிரான்ஸில் நன்ற் (Nant) நகரில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த தீ, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்டதுடன் நூறு பேரளவிலான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தீ விபத்து, திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த தீயினால் ஆரம்பத்தில் அஞ்சிய அளவுக்கு மோசமான சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் உள்ள நோட்ரே-டாம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் ஒரு வருடத்திற்குப் பின்னர் இவ்வாறு தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version