கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் காரணமாக தமது திருமணம் தாமதடைவதாக கூறி இத்தாலியின் பெண்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலிய தலைநகர் ரோமில் கடந்த வாரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணமகள்களைப் போன்று ஆடையலங்காரம் செய்த 15 யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

மத நிகழ்வுகள், மற்றும் அதிக எண்ணிக்கையானோர் ஒன்றுகூடுதல் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமது திருமணம் தாமதமாகுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை இப்பெண்கள் ஏந்தியிருந்தனர்.

இத்தாலிய திருமண வைபவ ஏற்பாட்டாளர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவரான, பிரான்சிஸ்கா வெசியோ கூறுகையில்,

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆனால், இத்தாலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தை ஒரு வருடத்தால் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version