யக்கல, கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று இரவு, யக்கலா சந்தை பகுதிக்கு அண்மையில் உள்ள வீதியில் மின்விளக்கு கம்பத்தில் குறித்த கார் மோதியதையடுத்து குறித்த விபத்து சம்பவித்துள்ளமை சி.சி.டிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இவ் விபத்தில், யக்கல, கினிகமவில் வசிக்கும் 43 வயது கணவன் மற்றும் அவரின் 40 வயது மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், 13 மற்றும் 20 வயதுடைய அவர்களின் பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காரின் ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.