இலங்கையில் முதல்முறையான அபூர்வ சத்திர சிகிச்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழும் நன்கொடையாளரின் கல்லீரலில் பகுதி ஒன்றை பயன்படுத்தி 9 வயதுடைய சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு கடந்த 14ஆம் வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைக்கு அறுவை மாற்று அறுவை சிகிச்சை ஒன்று இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த அறுவை சிகிச்சை 12 மணித்தியாலத்திற்கு அதிக நேரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்லீரல் வழங்கிய அவரது 38 வயதுடைய தாயும் இதுவரையில் வட கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version