இலங்கைக்கான சுவிஸ்நாட்டு தூதுவர் மற்றும் அதிகாரிகள் நேற்று கூட்டைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை திருகோணமலையில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளர். பின்னர் அதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ்தூதுவர், அவரது அரசியல் செயலாளர் மற்றும் அதிகாரிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடினேன். குறிப்பாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகவும் தேர்தலுக்கு பிறகு நிலைமை எவ்வாறாக அமையும் என்பது பற்றியும் அவரது கணிப்பை என்னிடம் கூறினார்.
இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தனது ஒப்பந்தங்களை வாக்குறுதிகளை மீறி செயற்பட்டுவந்திருக்கின்றது. அதற்கு முடிவு வரவேண்டும். எம்மை பொறுத்தவரையில், நாங்கள் எவரையும் பகைக்க விரும்பவில்லை. அதேநேரம் எமது மக்களது அடிப்படை உரிமைகளில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. எமது மக்கள் சார்ப்பாக மேற்கொள்ளவேண்டிய கடமைகளை மேற்கொள்வோம். அதேபோன்று எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்கவேண்டிய நேரத்தில் எடுப்போம்.