யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிபாக தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் நேற்றிரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச்செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது, பொலிஸார் துரத்தியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இரும்புக் கம்பிகள், கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version