இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 17,50,724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,45,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version