கொரோனாவிலிருந்து மீண்டு வரமுடியாமல், உலக நாடுகள் திணறிவருகின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று காலை (02.08.2020) நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான, 18,008,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 688,022 பேர் பலியாகி உள்ளதுடன், 11,118,271 பேர் மீண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 6,202,194 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அந்த வகையில், அமெரிக்காவில் 4,764,318பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 157,898 பேர் மரணித்துள்ளதுடன் 2,362,903 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 1,123பேர் மரணித்துள்ளனர்.
இந்தியாவில் 1,750,723 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 37,3647 பேர் மரணித்துள்ளதுடன் 1,145,629 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 852 பேர் மரணித்துள்ளனர்.
ரஷ்யாவில், 845,443 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,058 பேர் மரணித்துள்ளதுடன் 646,524 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 95 பேர் மரணித்துள்ளனர்.
பிரேசிலில் 2,708,876 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 93,616 பேர் மரணித்துள்ளதுடன், 1,884,051 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 1,048 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

