கொழும்பு, மெகசின் சிறையில் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட பூனை சிறையிலிருந்து தப்பிய சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியியுள்ளது.

கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்கு அருகே கடந்த சனிக்கிழமை சிறை அதிகாரிகளினால் பூனையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

பூனையின் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம்  அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (memory card) கட்டப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பூனை சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இன்று சிறைச்சாலையின் குறித்த பூனை வைத்திருந்த அறையிலிருந்து தப்பிவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலுக்கு அமைய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தன.

இவ் செய்தியானது சர்வதேச ரீதியாக பல பிரபல ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version